பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்


பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்
x

மன்னார்குடியில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

திருவாரூர்

மன்னார்குடி;

திருவாரூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில், முன்னாள் முதல்- அமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கான சமூக நலத் திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் மன்னார்குடியில் நடைபெற்றது.மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட தொழில் கூட்டுறவு அலுவலர் சேதுராமன் முன்னிலை வகித்தார். திருவாரூர் மாவட்ட தொழில் கூட்டுறவு அலுவலர் கவுதமன் வரவேற்றார். ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி சுமிதா திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பேசினார். பாதுகாப்பு அலுவலர் அமுதா பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்து பேசினார். மன்னார்குடி தலைமை ஆஸ்பத்திரி மனநல பிரிவு டாக்டர் புவனேஸ்வரி மன அழுத்தம் மற்றும் மனநல பாதிப்புகள் குறித்தும் அரசு ஆஸ்பத்திரிகளில் வழங்கப்படும் சிறப்பு மனநல சிகிச்சை குறித்தும் ேபசினார். மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள், பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் புதுமைப்பெண் திட்டம் குறித்தும் பேசினார்.


Next Story