பையர்நத்தத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்


பையர்நத்தத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் கிராமத்தில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் தேசிய பெண்கள் ஆணையம் சார்பில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமுக்கு பாப்பிரெட்டிப்பட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி கலைவாணி தலைமை தாங்கினார். இதில் பையர்நத்தம், கதிரிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். பாப்பிரெட்டிப்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார், வக்கீல்கள் கற்பகம், வின்னரசி ஆகியோர் கலந்து கொண்டு குடும்ப நல வழக்குகள், வங்கி கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள், குற்றவியல் வழக்குகள் நடத்துதல், பணியிடத்தில் பெண்கள் பாதுகாப்பு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா, ஊராட்சி செயலாளர் குணசேகரன் மற்றும் ராபர்ட் கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story