சட்டக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


சட்டக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x

நெல்லையில் சட்டக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் 2001- 2006-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நெல்லையில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. பேராசிரியர்கள் எபனேசர் ஜோசப், முஹமது, ஜான் கென்னடி ஆகியோர் கலந்து கொண்டனர். சட்டப்படிப்பிற்கான இயக்குனர் பேராசிரியர் சொக்கலிங்கம் இணைய வழியில் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்தோஷ்குமார் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார்.

மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக அவர்கள் படித்த கல்லூரியை, வகுப்பறையை சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அந்த வகுப்பில் படித்த மாணவர்களில் 4 பேர் சார்பு நீதிபதிகளாகவும், 3 பேர் நீதித்துறை நடுவர்களாகவும், 10 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆகவும் இருக்கின்றனர். 2 பேர் அரசு வக்கீலாகவும் உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை வக்கீல்கள் மில்ட்டன், மகாராஜா, ஸ்டாலின், நிஷா மற்றும் ஆனந்த் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.


Next Story