லாரன்ஸ் பள்ளி நிறுவனர் தின விழா
லாரன்ஸ் பள்ளி நிறுவனர் தின விழா
ஊட்டி
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், ஊட்டி லவ்டேலில் செயல்பட்டு வரும் லாரன்ஸ் பள்ளியில், 165-வது நிறுவனர் தின விழா நடைபெற்றது. இதையொட்டி நடந்த மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை இன்போசிஸ் நிறுவன இணை நிறுவனர் மற்றும் ஆதார் நிறுவன முன்னாள் தலைவர் நந்தன் நீல்ேகனி ஏற்றுக்கொண்டார். மேலும் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பரிசு கோப்பை வழங்கினார். இதையடுத்து நந்தன் நீல்ேகனி பேசும்போது, நமது நாடு அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்னோக்கி செல்ல வேண்டிய பாதை சரியாக கட்டமைக்கப்பட்டு உள்ளது. அதில் தொழில்நுட்ப வளர்ச்சி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. புவிசார் அரசியல் காரணமாக பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகின்றன. கடந்த ஒரு ஆண்டாக செயற்கை நுண்ணறிவு திட்டம் வளர்ந்து வருகிறது. இதற்கு ஏற்றார்போல் மாணவ-மாணவிகள் தங்களது திறமையை வளர்த்து கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக இசை நிகழ்ச்சி, குதிரை சாகச நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் மாணவ-மாணவிகள், பெற்றோர், முன்னாள் மாணவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் பிரபாகரன் செய்திருந்தார்.