விபத்து வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் வெளியிட கோரி வழக்கு
விபத்து தொடர்பான வழக்கில் முதல் தகவல் அறிக்கை(எப்.ஐ.ஆர்.) உள்ளிட்ட ஆவணங்களை இணையதளத்தில் வெளியிடக்கோரிய வழக்கிற்கு தமிழக டி.ஜி.பி. பதிலளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சாலை விபத்தில் என 2 மகன்கள் பலியாகினர். இதுகுறித்து மதுரை அடுத்துள்ள கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, இழப்பீடு கோரி மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தேன். ஆனால், விபத்து வழக்கு தொடர்பான ஆவணங்களுடன் தாக்கல் செய்யும்படி கூறி அந்த மனுவை தீர்ப்பாயம் ஏற்க மறுத்து விட்டது.
விபத்து தொடர்பாக போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) உள்ளிட்ட ஆவணங்களை கேட்டபோது, கொட்டாம்பட்டி போலீசாரும், அங்குள்ள போலீஸ்காரர் அரிச்சந்திரனும் லஞ்சம் கேட்டனர். லஞ்சம் கொடுக்காததால் என்னால் அந்த ஆவணங்களை பெற முடியவில்லை. அதுமட்டுமல்ல விபத்து இழப்பீடு வழக்கும் தொடர முடியவில்லை.
இணையதளத்தில் பதிவேற்றம்
என்னை போல தமிழ்நாடு முழுவதும் பலர் இதுபோன்ற ஆவணங்களை பெற முடியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே விபத்து வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் போலீசாரின் பிரத்யேக இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர், இந்த வழக்கிற்கு டி.ஜி.பி., மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்டோர் 3 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.