தர்மபுரி வக்கீல் கொலையில்கொலையாளிகளை நெருங்கி விட்டோம்போலீஸ் சூப்பிரண்டு தகவல்


தர்மபுரி வக்கீல் கொலையில்கொலையாளிகளை நெருங்கி விட்டோம்போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x
தினத்தந்தி 26 Jan 2023 6:45 PM GMT (Updated: 26 Jan 2023 6:46 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கிருஷ்ணகிரியில் 10 பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படையினர் கள்ளச்சந்தை மது விற்பனை, புகையிலை பொருட்கள் கடத்தலை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தர்மபுரி வக்கீல் சிவக்குமார் கொலையில் கொலையாளிகளை நெருங்கி விட்டோம். 2 நாட்களில் முழு விவரம் தரப்படும்.

ஓசூர் அடுத்த எலுவப்பள்ளி கிராமத்தில் அசோக்குமார் என்பவருக்கு சொந்தமான, 2 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்ற தும்மனப்பள்ளி ஜெகதீஷ், ஆவலப்பள்ளி சம்பங்கிராம ரெட்டி இருவரும் கைது செய்யப்பட்டனர். அதேபோல கட்டப்பஞ்சாயத்து குறித்து புகார்கள் வந்துள்ளன. அவற்றை விசாரித்து அதிலும் கைது நடவடிக்கை தொடரும்.

ஓசூர், கிருஷ்ணகிரியில் இதுகுறித்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதில், கட்டப்பஞ்சாயத்து, நிலப்பிரச்சினை குறித்து மக்கள் தாராளமாக புகார் அளிக்கலாம் கண்டிப்பாக குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவர்.

கடந்த 2 வாரத்தில், தனிப்படை போலீசார் சோதனையில் 1,460 கிலோ புகையிலை பொருட்கள், 2,400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2 லாரிகள், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story