வக்கீல்கள் சாலை மறியல்
வக்கீல்கள் சாலை மறியல் செய்தனர்
மதுரை
வாடிப்பட்டி
வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வாடிப்பட்டி வக்கீல்கள் சங்கம் சார்பாக வக்கீல்கள் குருவித்துறை ஹரிச்சந்திரன், கச்சைகட்டி குரு ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி மதுரை-திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் மறியலுடன் கூடிய ஆர்ப்பாட்டம் செய்தனர். சங்க தலைவர் முத்துமணி தலைமை தாங்கினார். செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் வக்கீல்கள் செல்வகுமார், முத்துராமலிங்கம், ராமசாமி, தங்கப்பாண்டி, கார்த்திக், வெள்ளைச்சாமி, சிவராமன், காசிநாதன், அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story