திண்டுக்கல்லில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு


திண்டுக்கல்லில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
x
தினத்தந்தி 21 Sept 2022 12:10 AM IST (Updated: 21 Sept 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மகிளா கோர்ட்டின் அரசு வக்கீல் மற்றும் அவருடைய மகள் வெட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

திருப்பூர் மகிளா கோர்ட்டின் அரசு வக்கீல் ஜமிலாபானு. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது அலுவலகத்தில் மகளுடன் இருந்தார். அப்போது அவருடைய அலுவலகத்துக்குள் புகுந்த மர்ம நபர் வக்கீல் ஜமிலாபானு, அவருடைய மகள் ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டார். அந்த நபரை திருப்பூர் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே வக்கீல் மற்றும் அவருடைய மகள் வெட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

அதன்படி திண்டுக்கல் வக்கீல்கள் சங்கத்தினரும் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் நேற்று வக்கீல்கள் ஆஜராகவில்லை. இதன் காரணமாக அனைத்து கோர்ட்டுகளிலும் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டன.


Next Story