இலுப்பூரில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
இலுப்பூரில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை
இலுப்பூர் வக்கீல்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், திருச்சி வக்கீல் வடிவேலுவை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும். பழனி வக்கீல்கள் சுரேந்திரன், ஜீவானந்தன் ஆகியோர் மீது பொய் வழக்குப்பதிவு செய்த ஆயங்குடி போலீசாரை கண்டிக்கிறோம், திண்டுக்கல் வக்கீல் சங்கம் தங்கள் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான சட்ட திட்டங்களில் தமிழ்நாடு பார் கவுன்சில் தலையிடுவதை கண்டித்தும், விசாரணையின்போது நிர்வாகிகளிடம் மிரட்டும் தோணியில் நடந்துகொண்டதை கண்டித்தும் இலுப்பூர் வக்கீல்கள் ஒருநாள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் வழக்கு விசாரணைக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story