வழக்கறிஞர்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
குடியாத்தத்தில் வழக்கறிஞர்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோர்ட்டு வளாகங்களில் இனி திருவள்ளுவர் மற்றும் மகாத்மாகாந்தி ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும், மற்ற தலைவர்களின் படங்கள் அகற்றப்பட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. டாக்டர் அம்பேத்கரின் படத்தை அகற்றும் நோக்கில் இந்த உத்தரவு இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே ஐகோர்ட்டு பதிவாளரின் உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தி குடியாத்தத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர், கோர்ட்டு முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அட்வகேட் அசோசியேஷன் செயலாளர் ஆர்.ரமேஷ்குமார், பார் அசோசியேஷன் துணைத் தலைவர் சி.தண்டபாணி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். வழக்கறிஞர்கள் பி.ராஜன்பாபு, எம்.மனோகரன், எம்.செந்தில்குமார், பி.எஸ்.கிரிபிரசாத், கே.சி.ஜெகதீஸ்வரன், ஆர்.பாரதிதாசன், எஸ்.அருள்வேந்தன், பி.செல்வகுமார், ஆர்.மதன்குமார் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்களின் எழுத்தர் சங்க தலைவர் செல்வகுமார், துணைத்தலைவர் குமரன், செயலாளர் மாணிக்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வழக்கறிஞர் சி.சுரேஷ்பாபு நன்றி கூறினார்.
ஐகோர்ட்டு பதிவாளரின் உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் கோர்ட்டை புறக்கணித்தனர்.