வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்


வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
x

வேலூரில் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் சுமதி கபிலன் தலைமை தாங்கினார். கிரிமினல் பார் அசோசியேஷன் தலைவர் ரவிராமன், செயலாளர் பாஸ்கரன், சிவில் பார் அசோசியேஷன் தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் மாநிலம், கோவை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறையை கண்டித்தும், அதற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரியும், பெண்கள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்தக்கோரியும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரியும் பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் பெண் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கவிதா, பிருந்தா, ஜமுனா, நித்யா, கவுதமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்தனர். அதனால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டன. இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் கோர்ட்டை புறக்கணிப்பதாக வக்கீல்கள் தெரிவித்தனர்.


Next Story