வக்கீல்கள் உண்ணாவிரதம்
தேனி மாவட்ட கோர்ட்டு முன்பு வக்கீல்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
தேனி
தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு, தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு செய்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தென்மண்டல செயலாளர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கி பேசினார். மாநில துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், தேனி சங்க தலைவர் செல்வன் மற்றும் வக்கீல்கள் பலர் கலந்துகொண்டு பேசினர். உண்ணாவிரதத்தின் போது இந்திய அளவில் நடைமுறையில் உள்ள முப்பெரும் சட்டங்களில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு தாக்கல் செய்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story