வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
மத்திய அரசின்அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முற்போக்கு வக்கீல்கள் சார்பில் பொள்ளாச்சி கோர்ட்டு வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு, வக்கீல் முகமது இப்ராகிம் தலைமை தாங்கினார்.
சேதுபதி முன்னிலை வகித்தார். கோவிந்தன், பிரபாகரன், நிரஞ்சன், ரங்கராஜன் உள்பட பல வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, இந்திய ராணுவத்தில் ஒப்பந்த அடிப் படையிலான அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு பயனற்ற திட்டத்தை அறிவிப்பதை தவிர்க்க வேண்டும். மக்கள் நலனில் அக்கறையுடன் மத்திய அரசு செயல்பட வேண்டும் என வலியுறுத்த கோஷமிட்டனர்.
Next Story