வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

திருநெல்வேலி

தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சி செய்யும் மத்திய அரசை கண்டித்து நெல்லை மாவட்ட கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நெல்லை வக்கீல்கள் தமிழ் மன்ற செயலாளர் வக்கீல் மணிகண்டன் தலைமை தாங்கினார். மன்ற பொருளாளர் சுதர்சன், முன்னாள் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மாவட்ட வக்கீல் சங்க உதவி செயலாளர் பரமசிவம், வக்கீல்கள் அப்துல் ஜபார், மீரான் மைதீன், ரமேஷ், பேச்சிமுத்து, மகேஷ், இசக்கிபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.


Next Story