தூத்துக்குடியில்வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில்வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டியைச் சேர்ந்த வக்கீல் ஜெய்கணேஷ், சென்னை சைதாபேட்டையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தூத்துக்குடியில் வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு-புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் பிரபு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் தனசேகர் டேவிட், ரூபஸ் ஆசீர்வாதம், சின்னத்தம்பி, சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story