தட்டார்மடம் அருகே ரூ.3.44 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல்


தட்டார்மடம் அருகே ரூ.3.44 கோடியில் உயர்மட்ட பாலம்  கட்டும் பணிக்கு அடிக்கல்
x

தட்டார்மடம் அருகே ரூ.3.44 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே ரூ.3.44 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

உயர்மட்ட பாலம்

தட்டார்மடம் அருகேயுள்ள முதலூரில் இருந்து உடன்குடி செல்லும் பிரதான சாலையில் தரைமட்ட பாலம் இருந்து வந்தது. இந்த பாலத்தில் மழைக்காலங்களில் பாலத்தின் மேல்நீர் அதிக அளவில் செல்வதால், அப்பகுதிமக்கள் உயர்மட்ட பாலம்கட்டி தரக்கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு நேற்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தனர்.

இந்தநிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், முதலூர் ஊராட்சி தலைவர் பொன்முருகேசன், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

வீரபாண்டியன்பட்டினம்

திருச்செந்தூர் யூனியனுக்கு உட்பட்ட வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.21 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி, மோட்டார் அறை கட்டுதல் மற்றும் குடிநீர் இணைப்பு விரிக்கம் உள்ளிட்ட பணிகளுக்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

விழாவிற்கு, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். புனித தோமையார் ஆலய பங்கு தந்தை கிருபாகரன் அர்ச்சிப்பு செய்து விழாவை தொடங்கி வைத்தார். இதில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

கிருஷ்ணாநகர்

பின்னர், மேலத்திருச்செந்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிருஷ்ணாநகரில் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டபட உள்ள பஸ் ஸ்டாப் நிழல் குடை அமைக்கும் பணிக்கும் அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில், திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், யூனியன் ஆணையாளர் பொங்கலரசி, வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து தலைவர் எல்லமுத்து, துணை தலைவர் ஜெகதீஸ் வீ.ராயன், மேலத்திருச்செந்தூர் பஞ்சாயத்து தலைவர் மகாராஜன், தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிகோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவைகுண்டம்

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நட்டார்குலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 99-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் தெருமுனைப்பிரசாரம் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தலைமை கழக பேச்சாளர் பசும்பொன் ரவிச்சந்திரன், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாசலம், யூனியன் தலைவர் கோமதி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏழைகளுக்கு தையல் மெஷின் மற்றும் சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகப்பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உடன்குடி

உடன்குடி அருகேயுள்ள மாதவன்குறிச்சி -அமராபுரம் கிராமங்கள் இடையே ரூ.8 கோடியில் உயர் மட்ட இணைப்பு பாலம் அமைக்கும் பணியின் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாதவன் குறிச்சி பஞ்சாயத்து தலைவர் சேர்மத்துரை, துணைத் தலைவர் கருப்பசாமி, யூனியன் கவுன்சிலர் ஜெயகமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பங்கேற்று பாலம் அமைக்கும் பணியை கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செழியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜெசிபொன்ராணி, உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு துணைத்தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story