தியாகி இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி


பரமக்குடியில் தியாகி இமானுவேல்சேகரன் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் தலைவர்கள், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

பரமக்குடியில் தியாகி இமானுவேல்சேகரன் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் தலைவர்கள், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

தியாகி இமானுவேல்சேகரன் நினைவு நாள்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 66-வது நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் தலைவர்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும், சமுதாய பிரமுகர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

தியாகி இமானுவேல் சேகரன் குடும்பத்தின் சார்பில் அவருடைய மகள் சுந்தரி பிரபா ராணி, பேரன்கள் மகேஷ்குமார், டாக்டர் கோமகன், சக்கரவர்த்தி, சந்திரசேகர் வின்சென்ட் பிரபாகர் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அவரது பிறந்த ஊரான செல்லூர் கிராமத்தின் சார்பில் கிராம தலைவர் சங்கர பாண்டி, ஊராட்சி மன்ற தலைவர் மகேசுவரி ஜீவன் தலைமையில் கிராம மக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்

ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார்.

பரமக்குடி தேவேந்திரர் பண்பாட்டு கழகம் சார்பில் தலைவர் பரம்பை பாலா, செயலாளர் வக்கீல் புண்ணியமூர்த்தி, பொருளாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பொன்னையாபுரம், பாலன்நகர், சரசுவதிநகர், காந்திநகர், அண்டக்குடி பாம்புவிழுந்தான், முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள், சமுதாய அமைப்புகள் சார்பில் பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். பால்குடங்கள் சுமந்து வந்தும் நினைவிடத்தில் பாலாபிஷேகம் செய்தனர். ஆண்கள் அலகு குத்தி வந்தனர்.

அ.தி.மு.க.

அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, ராஜலட்சுமி, டாக்டர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி, மாநில மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் பாதுஷா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் முத்தையா, சதன் பிரபாகர், மாணிக்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் சித்ரா மருது, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஸ்டாலின் என்ற ஜெயச்சந்திரன், பரமக்குடி நகர் செயலாளர் ஜமால், ஒன்றிய செயலாளர்கள் முத்தையா, லோகிதாசன், நயினார்கோவில் ஒன்றிய விவசாய அணி செயலாளர் தேர்த்தாங்கால் பூமிநாதன், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், இந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன், ஒன்றிய மாணவரணி செயலாளர் முத்துக்குமார், பேராவூர் அ.தி.மு.க. செயலாளர் மாரிமுத்து, பேராவூர் ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி மாரிமுத்து உள்பட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அண்ணாமலை

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி, ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறும்போது, "எதிர்கால இளைஞர்களுக்கு நல்ல சமுதாயத்தை அமைக்க உறுதுணையாக. வழிகாட்டியாக திகழ்ந்தவர் தியாகி இமானுவேல் சேகரன். அவருக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது" என்றார்.

டி.டி.வி.தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முருகன், துணை பொதுச்செயலாளர் மாணிக்கராஜா, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மகேந்திரன், ஜெயலலிதா பேரவை செயலாளர் டேவிட் அண்ணாதுரை, கிழக்கு மாவட்ட செயலாளர் ஜி.முனியசாமி, சிவகங்கை மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி உள்பட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ்-விடுதலை சிறுத்தைகள் கட்சி

காங்கிரஸ் கட்சியின் சார்பில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ராம பிரபாகரன் தலைமையில் துணை பொதுச்செயலாளர்கள் அற்புத குமார், கலைவேந்தன், கனி அமுதன், முன்னாள் மாவட்ட செயலாளர் வேந்தை சிவா உள்பட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

ஓ.பன்னீர்செல்வம் அணி

அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் தர்மர் எம்.பி. தலைமையில் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன். அய்யப்பன் எம்.எல்.ஏ., கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ், மதுரை புறநகர் பகுதி மாவட்ட செயலாளர் முருகேசன், இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கதிரவன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர்கள் வைகை பாலன், சுப்பிரமணியன், பசும்பொன், அமைப்புச்செயலாளர் சேதுராமன், விருதுநகர் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம், பரமக்குடி தொகுதி பொறுப்பாளர் வக்கீல் நவநாதன், நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் ரஜினிகாந்த், போகலூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ், வானியவல்லம் ஊராட்சி மன்ற தலைவர் நாகநாதன், போகலூர் ஒன்றிய துணைச்செயலாளர் நவாஸ்கான், இளைஞர் பாசறை செயலாளர் சிலம்புராஜ், கருமல் ஒன்றிய கவுன்சிலர் முருகன் உள்பட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

ம.தி.மு.க.

ம.தி.மு.க. சார்பில் துணை பொது செயலாளர் ராஜேந்திரன், சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், அரசியல் ஆலோசனை உறுப்பினரும் நகர் மன்ற துணைத் தலைவருமான குணா, தென்காசி மாவட்ட செயலாளர் சுதாகர், பரமக்குடி நகர் செயலாளர் பிச்சை மணி, மாவட்ட துணைச் செயலாளர் பழ.சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர் சடாச்சாரம், மாவட்ட பிரதிநிதி பசீர்அகமது, நிர்வாகிகள் அண்ணாதுரை, நாகேந்திரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

அரசியல் கட்சிகள்-அமைப்புகள்

மேலும், தே.மு.தி.க., தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, தாய் தமிழர் கட்சி, மக்கள் விடுதலைக் கட்சி, தேவேந்திரகுல இளைஞர் எழுச்சி பேரவை, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ராமநாதபுரம் மாவட்ட மத்திய, மாநில பட்டியல் மற்றும் பழங்குடியினர் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் டாஸ்மாக் பிரிவு, தேவேந்திரகுல கூட்டமைப்பு, பரமக்குடி தேவேந்திரர் பணியாளர் நலச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இமானுவேல்சேகரன் நினைவிடத்துக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.


Next Story