நெல் பயிரை தாக்கும் இலை சுருட்டல் நோய்


நெல் பயிரை தாக்கும் இலை சுருட்டல் நோய்
x
தினத்தந்தி 27 April 2023 12:15 AM IST (Updated: 27 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் நெல் பயிரை இலை சுருட்டல் நோய் தாக்குவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு:

மூங்கில்துறைப்பட்டு, மேல்சிறுவள்ளூர், மைக்கேல்புரம், பொரசப்பட்டு, சவேரியார்பாளையம், மங்களம், கடுவனூர், கானாங்காடு, சின்ன கொள்ளியூர், பெரியகொள்ளியூர், அருளம்பாடி, வடமாமாந்தூர், அரும்பராம்பட்டு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். சாத்தனூர் அணை நீரை கொண்டும், நிலத்தடி நீரை நம்பியும் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இவ்வாறு 40 நாட்களுக்கு முன்பு பயிரிடப்பட்ட நெல்பயிர்களை அதிகளவில் இலை சுருட்டல் பூச்சிகளால் தாக்கப்படுவதால் நெல் பயிர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் வளர்ச்சி குறைவாகவும் காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நோய் தாக்கப்பட்டது குறித்து வேளாண் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தோம். அதற்கு அவர்கள், நெல் பயிர்களை எடுத்து வாருங்கள் அதற்கு உண்டான மருந்துகளை தெரிவிக்கிறோம் என்று கூறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட வேளாண் அதிகாரிகள் நெல் பயிர்களுக்கு நேரடியாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என்றனர்.


Next Story