காங்கிரஸ் கட்சியினர் துண்டுபிரசுரம் வினியோகம்


காங்கிரஸ் கட்சியினர் துண்டுபிரசுரம் வினியோகம்
x

nமத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் துண்டுபிரசுரம் வினியோகம் செய்தனர்.

சேலம்

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு செய்த மத்திய அரசை கண்டித்தும், அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அம்மாப்பேட்டை பகுதியில் பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் ஏ.ஆர்.பி.பாஸ்கர் தலைமை தாங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். மாநகர பொதுச்செயலாளர் தாரை ராஜகணபதி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பச்சப்பட்டி பழனிசாமி, மெடிக்கல் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், மண்டல தலைவர்கள் நாகராஜ், ராமன், கோவிந்தன், நிசார் அகமது, டிவிசன் தலைவர்கள் மணி, ஜீவானந்தம், மேகநாதன், சதாசிவம், பழனிசாமி, பார்த்திபன், லோகநாதன், கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story