சாராயத்திற்கு எதிராக துண்டு பிரசுரம் வினியோகம்


சாராயத்திற்கு எதிராக துண்டு பிரசுரம் வினியோகம்
x

சாராயத்திற்கு எதிராக துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில், ஆலங்குடி பஸ் நிலையம், காமராஜர் சிலை, அரசமரம் பஸ் நிறுத்தம், வடகாடு முக்கம், சந்தைப்பேட்டை ஆகிய பகுதிகளில் சாராயத்திற்கு எதிராக துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள், கடைகளில் உள்ள பொதுமக்களிடமும் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். மேலும் ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அறந்தாங்கி, கோட்டைப்பட்டினம் ஆகிய உட்கோட்டங்கள் மற்றும் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட நிலைய சரகத்திற்குள் சாராயம் காய்ச்சுதல், போலி மதுபானம் தயாரித்தல், கடத்தல், விற்பனை செய்வது மற்றும் எரிச்சாராயம் கடத்துதல் மற்றும் கஞ்சா பயிரிடுதல் விற்பனை செய்ய வைத்திருத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தகவல் தெரிவிக்க போலீசாரால் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு 8300009200, போலீஸ் இன்ஸ்பெக்டர் 99 65868678, மதுவிலக்கு அமலாக்க பிரிவு 7448779587 மற்றும் ஹலோ போலீஸ் 7293911100 மற்றும் ஆலங்குடி மதுவிலக்கு பிரிவு பொது டோல் பிரீ எண் 10581 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.


Next Story