ஆவின் பால் பாக்கெட்டுகளில் கசிவு


ஆவின் பால் பாக்கெட்டுகளில் கசிவு
x

கோத்தகிரி பகுதிக்கு வினியோகிக்கப்படும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் கசிவு ஏற்படுகிறது. இதனால் நஷ்டம் ஏற்படுவதாக முகவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி பகுதிக்கு வினியோகிக்கப்படும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் கசிவு ஏற்படுகிறது. இதனால் நஷ்டம் ஏற்படுவதாக முகவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

பால் பாக்கெட்டுகள்

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஆவின் பால் உற்பத்தி நிலையத்தில் இருந்து கோத்தகிரி பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட முகவர்களுக்கு பால் மற்றும் உப பொருட்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக தினமும் காலையில் ஊட்டியில் இருந்து கோத்தகிரி பகுதிக்கு வாகனம் மூலம் பால் பாக்கெட்டுகள் கொண்டு வந்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவற்றை பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

கசிவால் நஷ்டம்

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பால் பாக்கெட்டுகள் முறையாக ஒட்டப்படாமல்(பேக்கிங் செய்யப்படாமல்) வழங்கப்படுகிறது. இதனால் அதிலுள்ள துளை வழியாக பால் கசிந்து வீணாகி வருகிறது. அந்த பால் பாக்கெட்டுகளை வாங்கி செல்லும் பொதுமக்கள், கசிவு இருப்பதாக வறி முகவர்களிடம் திரும்ப வழங்கிவிடுகின்றனர். இதனால் அவற்றை விற்பனை செய்ய முடியாததால், வீணாகும் நிலை உள்ளது. இதன் காரணமாக நஷ்டம் ஏற்படுவதாக முகவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே பால் கசியாத வகையில் பாக்கெட்டுகளை பேக்கிங் செய்து வினியோகம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story