குடும்ப பிரச்சினைகளை போக்க இருப்பதை வைத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும்
இருப்பதை வைத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று மருத்துவ இணை இயக்குனர் தெரிவித்தார்.
உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு நாளையொட்டி திருப்பத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு உதவும் உள்ளங்கள் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
அப்போது எயந்திரமயமான உலக வாழ்க்கையில் குடும்பத்தில் பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை அன்பையும் பாசத்தையும் சரிவர பகிர்ந்து கொள்ளாத காரணத்தினால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சகிப்புத்தன்மையோடும், மனித நேயத்தோடும் பழக முற்படாததாலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு மன அழுத்தம் உண்டாகிறது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதால் குழந்தைகளின் மனநிலைமாற்றம், அவர்கள் வளர வளர சில தவறான முடிவுகள் எடுக்கின்றன காரணத்தினால் விலை மதிக்க முடியாத உயிரிழப்பு ஏற்படுகிறது. இவற்றையெல்லாம் தடுத்து குடும்பத்தில் அன்பையும். அடுத்தவர் கருத்துக்கு மதிப்பளித்து விட்டு கொடுத்தும், இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மனநல மருத்துவர் பிரபவராணி, மனநல காப்பக சமூக பணியாளர்கள், செவிலியர்கள், இல்ல வாசிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.