283 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பில் கற்றல், கற்பித்தல் உபகரணங்கள்


283 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பில் கற்றல், கற்பித்தல் உபகரணங்கள்
x

283 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பில் கற்றல், கற்பித்தல் உபகரணங்களை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.

திருவண்ணாமலை


283 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பில் கற்றல், கற்பித்தல் உபகரணங்களை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.

கற்றல், கற்பித்தல் உபகரணங்கள்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவன நிதியில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 283 மாற்றுத்திறன் கொண்ட நபர்களுக்கு ரூ.11 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பில் கற்றல் கற்பித்தல் உபகரணங்களை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.

பாராட்டு சான்றிதழ்

மேலும் திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளில் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கலைத் திருவிழா நடத்தப்பட்டது.

இதில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 48 மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

ஆதரவற்ற கிறிஸ்தவ விதவைகள் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள கிறிஸ்தவ மகளிர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிடும் வகையில் கறவை மாடு, ஆடு வளர்த்தல், பெட்டிக்கடை மற்றும் பூக்கடை போன்ற சுய தொழில் புரிய 76 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிக்கான காசோலையினை கலெக்டர் வழங்கினார்.

மேலும் கலெக்டரின் தன் விருப்ப நிதியில் இருந்த செல்வி என்பவருக்கு கறவை மாடு வாங்க ரூ.30 ஆயிரமும், ஆரணி தாலுகா வேலப்பாடி கிராமம் இலங்கை முகாமில் வசிக்கும் யூட்கலிஸ்டா தர்மினி என்பவருக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.26 ஆயிரத்து 900-ம் நிதியினையும் அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குமரன், ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் அரி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக கேட்டல் மற்றும் பேச்சு பயிற்சியாளர் எலிசபெத் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story