திருச்செந்தூரில் 2குழந்தைகளை தவிக்க விட்டு25 பவுன் நகையுடன் இளம்பெண் மாயம்


தினத்தந்தி 18 Nov 2022 12:15 AM IST (Updated: 18 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் 2குழந்தைகளை தவிக்க விட்டு25 பவுன் நகையுடன் இளம்பெண் மாயமானார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஜீவாநகரை சேர்ந்தவர் டேவிட்ராஜாமணி (40). கோவையில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரதி அமுதா (35). இவர்களுக்கு காபிரியேல் (10), யாழினி மரியாள் (6) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் டேவிட் ராஜாமணியின் தந்தை ஜோசப் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 15-ந் தேதி ஜோசப் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றார். வீட்டுக்கு அவர் திரும்பி வந்தபோது குழந்தைகளை விட்டு விட்டு ரதிஅமுதா மாயமாகி இருப்பது தெரியவந்தது. மேலும் பீரோவில் இருந்த 25 பவுன் நகைகளையும் அவர், எடுத்து சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டேவிட்ராஜாமணி அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ரதி அமுதாவை தேடி வருகின்றனர்.

இதேபோன்று, திருச்செந்தூர் அருகே ஆலந்தலை தெற்கு தெருவை சேர்ந்த ஜஸ்டின் மகள் சுஷ்மா (23). திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். இவர், கடந்த 15-ந் தேதி வேலைக்கு சென்றவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. உறவினர் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடியும் அவர், குறித்து எந்த தகவலும் இல்லை. இதுதொடர்பாக சுஷ்மாவின் தாய் ஸ்ப்ரையூனா கொடுத்து புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சுஷ்மாவை தேடிவருகின்றனர்.


Next Story