ஆ.ராசா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


ஆ.ராசா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x

இந்து மதத்தை புண்படுத்தும் வகையில் பேச்சு: ஆ.ராசா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, எந்தவொரு மதத்தையும் இழிவுபடுத்தி பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்ற சூழ்நிலையில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, இந்து மதத்தை புண்படுத்தும் வகையில் மதநல்லிணக்கத்திற்கு எதிரான பேச்சை பேசி இருக்கிறார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி உறுதிமொழி எடுத்துக் கொண்டு எம்.பி.யாக பதவி வகித்துக் கொண்டிருக்கின்ற ஒருவர், இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்படுவது இந்திய அரசமைப்புச் சட்டத்தை இழிவுபடுத்துவதற்கு சமம் ஆகும். அந்த வகையில், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஆ.ராசாவின் பேச்சுக்கும், அதனைக் கண்டிக்காத தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர் முதல்-அமைச்சர் என்பதையும், மத நல்லிணக்கத்திற்கு எதிரான இதுபோன்ற செயலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பு சட்டம்-ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்-அமைச்சரின் கடமை என்பதையும் கருத்தில் கொண்டு ஆ.ராசா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story