சட்ட விழிப்புணர்வு முகாம்
கீழநத்தத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
திருநெல்வேலி
சேரன்மாதேவி:
நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் இணைந்து, கீழநத்தம் வடக்கூர் பகுதியில் தொழிலாளர் நல சட்டம் பற்றிய இலவச சட்ட விழிப்புணர்வு முகாமை நடத்தின. மாவட்ட நீதிபதி திரிவேணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கிராம உதயம் ஆலோசனைக்குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். பகுதி பொறுப்பாளர் செந்தில்குமார் வரவேற்று பேசினார்.
கிராம உதயம் மையத்தலைவர்கள் விஜயலட்சுமி, விஜயா ஆகியோர் கருத்துரை ஆற்றினர். நிகழ்ச்சியில், கிராம உதயம் உறுப்பினர்கள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். தன்னார்வ தொண்டர் மாதவி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story