சட்ட விழிப்புணர்வு முகாம்


சட்ட விழிப்புணர்வு முகாம்
x

சங்கரன்கோவிலில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சார்பு நீதிபதி மற்றும் சட்டப்பணிகள் குழு தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். இதில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி மகாலட்சுமி மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி நரசிம்மமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சார்பு நீதிபதி சந்திரசேகர், மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு குறித்து பேசினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story