பெண் குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்


பெண் குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்
x

தோப்புத்துறை அரசு பள்ளியில் பெண் குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி வேதாரண்யம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தீப்கா தலைமை தாங்கி மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு புத்தகங்களை வழங்கினார்.இதில் கலந்து கொண்ட வக்கீல் சங்க உறுப்பினர்கள் சட்ட விழிப்புணர்வு மற்றும் சட்ட கல்வி குறித்து விளக்கி கூறினர்.


Next Story