திருநங்கைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்
வந்தவாசியில் திருநங்கைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்
திருவண்ணாமலை
வந்தவாசி
வந்தவாசி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் திண்டிவனம் ரோட்டில் உள்ள அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் திருநங்கைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் கல்லூரி நிறுவனர் பி.முனிரத்தினம் தலைமையில் நடந்தது.
முகாமுக்கு கல்லூரி செயலாளர் எம்.ரமணன் மூன்னிலை வகித்தார். மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.மணி, இ.முருகன் ஆகியோர் பங்ேகற்றனர்.
சிறப்பு அழைப்பாளராக தனியார் பள்ளி அலுவலர் ஸ்ரீமதி பங்கேற்று திருநங்கைகளுக்கான இலக்கியங்கள் குறித்தும், சட்ட விளக்க உரையாற்றி விழிப்புணர்ைவ ஏற்படுத்தினார்.
கல்லூரி நிர்வாக அலுவலர் பிரபாகரன் வரவேற்றார்.
வட்ட சட்டப்பணிகள் குழு சார்பாக நிர்வாக அலுவலர் வெங்கடேசன் நன்றி கூறினார். முகாமில் கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story