சட்ட விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி


சட்ட விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி
x

சட்ட விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி நடந்தது.

கரூர்

தேசிய சட்ட சேவைகள் தினத்தை முன்னிட்டு தாந்தோணிமலையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு பற்றிய புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை மாவட்ட கூடுதல் மகிளா நீதிபதி நசீமாபானு தொடங்கி வைத்தார். கண்காட்சியில் சட்டம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இதனை பொதுமக்கள் மற்றும் பலர் கண்டுகளித்தனர். இதில், குடும்ப நல நீதிபதி எழில், தலைமை குற்றவியல் நீதிபதி ராஜலிங்கம், முதன்மை சார்பு நீதிபதி கோகுல் முருகன், கூடுதல் சார்பு நீதிபதி பாரதி, குற்றவியல் நடுவர் நீதிபதி அம்பிகா, சுஜாதா, நீதிபதிகள் பார் கவுன்சில் தலைவர் மாறப்பன், செயலாளர் தமிழ்வாணன், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், நீதிமன்ற ஊழியர்கள், சட்டம் சார்ந்த தன்னார்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பாக்கியம் செய்திருந்தார்.


Next Story