சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி


சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 11 Oct 2023 12:30 AM IST (Updated: 11 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் சட்டக்கல்லூரி சார்பில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி தென்காசி மாவட்டம் ராமநாதபுரம் நாடார் கமிட்டி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமங்களின் செயலாளர் எஸ்.டி.முருகேசன் ஆலோசனையின் பேரிலும், சட்டக்கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி, துணை முதல்வர் காளிச்செல்வி ஆகியோர் அறிவுறுத்தலின் பேரிலும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு உதவி பேராசிரியர் ஆரிபா தலைமை தாங்கினார். பல்வேறு சட்டங்கள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு எடுத்து கூறப்பட்டது. முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் வரவேற்று பேசினார். இதில் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story