சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி


சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கரூர்

கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக செல்லாண்டி பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை சேர்ந்த பாக்கியம் கலந்து கொண்டு குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமாக பேசினார். நீதிபதி சுஜாதா குழந்தைகள் துன்புறுத்தல், போக்சோ சட்டம் குறித்து எடுத்து கூறினார். டாக்டர் சிவக்குமார் குழந்தைகள் மனநிலை மற்றும் குழந்தைகள் உடல்நிலை சம்பந்தமாக பேசினர். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story