சட்ட விழிப்புணர்வு முகாம்


சட்ட விழிப்புணர்வு முகாம்
x

சட்ட விழிப்புணர்வு முகாம்

திருப்பூர்

காங்கயம்

காங்கயம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் பெண்ணுரிமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தின் உத்தரவின் பேரிலும், மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் வழிகாட்டுதலின் படியும், காங்கயம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பில் பெண்ணுரிமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று வீரணம்பாளையம் கிராமத்தில் நடைபெற்றது.

இந்த முகாமில் காங்கயம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான ராஜா தலைமை தாங்கி, பெண்ணுரிமை பற்றியும், வரதட்சணை தடைச் சட்டம், குழந்தைத் திருமண தடைச் சட்டம், வீட்டு வன்முறையிலிருந்து பெண்களுக்குப் பாதுகாப்புச் சட்டம், பணியிடத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல், பாதுகாப்புச் சட்டங்கள் பற்றியும், சட்டப்பணிகள் குழுவின் சேவைகள் பற்றியும் எடுத்துரைத்தார். இந்த முகாமில் வீரணம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் உமாநாயகி, காங்கயம் வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர்கள் நிர்மல்குமார், நவீன் உட்பட 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

-


Next Story