சட்டமன்ற மதிப்பீட்டுக்குழுவினர் ஆய்வு
வேதாரண்யத்தில் சட்டமன்ற மதிப்பீட்டுக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
வேதாரண்யம்:
சட்ட மன்ற மதிப்பீட்டு குழு
வேதாரண்யம் அடுத்த கோவில்பத்து, கோடியக்கரை பகுதியில் தமிழக அரசு சார்பில் நடைப்பெற்று வரும் பணிகள் குறித்து தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.மன்னாா்குடி டி.ஆா்.பி. ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் உறுப்பினர்களான அக்ரிகிருஷ்ணமூர்த்தி, அர்ச்சுணன், ஈஸ்வரன், ராமச்சந்திரன், அருள், அன்பழகன், பாலசுப்ரமணியன், செல்லூர் ராஜு, ராஜ்குமார், முகமது ஷாநவாஸ் உள்ளிட்ட 11 பேர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
சேமிப்பு கிடங்கு
இக்குழுவினர் வேதாரண்யத்தை அடுத்த கோவில்பத்து பகுதியில் ஆசியாவிலேயே 2- வது மிகப்பெரிய சேமிப்பு கிடங்கான தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக தானிய சேமிப்புக் கிடங்கில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது .கஜா புயலின் போது சேதமடைந்த நெல் சேமிப்பு கிடங்கில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள் குறித்து, கேட்டறிந்து இருப்பில் உள்ள நெல்மணிகளின் தரம் மற்றும் ஈரப்பதத்தின் அளவை ஆய்வு செய்தனர். மேலும் தற்போது ரூ.6 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ள தரைத்தள பணிகள் மற்றும் தானியங்கு முறையில் லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் நெல்மணியை சேமிப்பு கிடங்குக்கு அனுப்ப உள்ள திட்டப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர்.பின்னர் கோடியக்கரை வனவிலங்கு சரணாலய பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.