சட்டமன்ற மனுக்கள் குழு 6-ந்தேதி வருகை


சட்டமன்ற மனுக்கள் குழு 6-ந்தேதி வருகை
x

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சட்டமன்ற மனுக்கள் குழு 6-ந்தேதி வருகிறது என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு வருகிறது.

இதையொட்டி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற துறை சார்ந்த மனுக்கள் குறித்த விவரங்களை துறைவாரியாக கேட்டறிந்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசுகையில், பொதுமக்கள் சட்டமன்ற மனுக்கள் குழுவிற்கு மனுக்கள் அனுப்பி இருந்தனர்.அதில் 50 மனுக்கள் மீது சட்டமன்ற மனுக்கள் குழுவினர் மனுதாரர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களிடம் நேரடியாக கேட்டறிய உள்ளனர்.

மேலும் மனுக்கள் குழுவினர் பொதுமக்கள் அளித்த மனுவின் பிரச்சினைகளை நேரடியாக சென்று சில இடங்களை பார்வையிட உள்ளனர் என்றார்.

கூட்டத்தில் சட்டமன்ற மனுக்கள் குழுவிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 50 மனுக்களின் பிரச்சினைகள் குறித்து துறை சார்ந்த சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

மேலும் சட்டமன்ற மனுக்கள் குழுவின் நேரடி விசாரணையில் உரிய விளக்கங்களை அளிக்கவும், மேல் நடவடிக்கை அறிக்கையில் என்ன என்பதை தெளிவாக தெரிவிக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களிடம் தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story