ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து 8 எலுமிச்சம் பழங்களால் அலங்காரம்

ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து 8 எலுமிச்சம் பழங்களால் அலங்காரம்
x

கும்பகோணம் நீலத்தநல்லூர் சாலையில் உள்ள ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் தை அமாவாசையைெயாட்டி முன்னிட்டு நேற்று 11 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து 8 எலுமிச்சம் பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

தை அமாவாசை வழிபாடு

கும்பகோணம் நீலத்தநல்லூர் சாலை காமராஜ் நகர் பகுதியில் விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.இந்த கோவிலில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று தை மாத அமாவாசையை முன்னிட்டு மூலவரான 11 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து 8 எலுமிச்சை பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

அர்ச்சனை

இதில் தமிழகத்தில் கோடைக்கால வறட்சியால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியும், டெல்டா மாவட்டங்களில் போதிய அளவு மழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டியும் பக்தர்கள் வழிபாடு செய்தனா். முன்னதாக உற்சவர் ராமர், லெட்சுமணர், சீதை, அனுமனுக்கு கவசம் அணிவிக்கப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது. வழிபாடு ஏற்பாடுகளை கோவில் நிறுவனர் ராமன், மோகன் பட்டாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story