கடும் வெயில் காரணமாக தேவை அதிகரிப்பால் திருப்பூரில் எலுமிச்சம்பழத்தின் விலை அதிகரித்துள்ளது.


கடும் வெயில் காரணமாக தேவை அதிகரிப்பால் திருப்பூரில் எலுமிச்சம்பழத்தின் விலை அதிகரித்துள்ளது.
x
தினத்தந்தி 17 May 2023 9:54 PM IST (Updated: 18 May 2023 10:38 AM IST)
t-max-icont-min-icon

கடும் வெயில் காரணமாக தேவை அதிகரிப்பால் திருப்பூரில் எலுமிச்சம்பழத்தின் விலை அதிகரித்துள்ளது.

திருப்பூர்

திருப்பூர்

கடும் வெயில் காரணமாக தேவை அதிகரிப்பால் திருப்பூரில் எலுமிச்சம்பழத்தின் விலை அதிகரித்துள்ளது.

தேவை அதிகரிப்பு

திருப்பூரில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. சமீபத்தில் சில தினங்கள் மட்டும் மழை பெய்த நிலையில் தற்போது அக்னி நட்சத்திரம் காரணமாக கத்தரி வெயில் அனைவரையும் வாட்டி எடுத்து வருகிறது. காலை முதல் மாலை வரைக்கும் வெயில் உக்கிரமாக இருப்பதால் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கு சிரமப்படுகின்றனர். குறிப்பாக மதிய வேளையில் உச்சந்தலையை துளைப்பது போல் இருக்கும் உச்சி வெயிலால் வயதானவர்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இவ்வாறு திருப்பூரில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெயிலுக்கு இதம் தரும் இளநீர், தர்பூசணி, நுங்கு, சர்பத், மோர், பழரசங்கள் மற்றும் பல்வேறு குளிர்ச்சி தரும் பானங்களின் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. இதில் எலுமிச்சம்பழத்தின் பங்கும் அதிகமாக இருப்பதால் இதன் தேவையும் அதிகரித்துள்ளது.

விலை உயர்வு

இவ்வாறு எலுமிச்சம்பழத்தின் தேவை அதிகமாக இருப்பதால் அதன் விலையும் அதிகரித்துள்ளது. சாதாரண காலங்களில் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.70-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது இதன் விலை மேலும் அதிகரித்துள்ளது. தென்னம்பாளையம் மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது எலுமிச்சை வரத்து தட்டுப்பாடின்றி இருப்பதால் பெரிய அளவில் விலை உயர்வு ஏற்படவில்லை. கடந்த காலங்களில் கோடை நேரத்தில் எலுமிச்சை வரத்து குறைவாக இருந்ததால் ஒரு கிலோ ரூ.300 வரைக்கும் விற்பனையானதாக வியாபாரிகள் கூறுகின்றனர். தற்போது பெரும்பாலான கடைகளில் எலுமிச்சம்பழம் எண்ணிக்கை அளவில் கொடுப்பதற்கு பதில் எடையளவில் விற்பனை செய்யப்படுகிறது.


Next Story