வாகனம் மோதி சிறுத்தை பூனை பலி


வாகனம் மோதி சிறுத்தை பூனை பலி
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வாகனம் மோதி சிறுத்தை பூனை பலியானது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து டானிங்டன் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் நேற்று முன்தினம் இரவு சிறுத்தை பூனை ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது. அப்போது அடையாளம் தெரியாத வாகனம் சிறுத்தை பூனை மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதனால் படுகாயம் அடைந்த சிறுத்தை பூனை, அதே இடத்தில் இறந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் கோத்தகிரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், சிறுத்தை பூனையின் உடலை கைப்பற்றினர். மேலும் அதன் உயிரிழப்புக்கு காரணமான அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story