குன்னூர் அருகே சாலையை கடந்து சென்ற சிறுத்தைப்புலி
குன்னூர் அருகே சாலையை சிறுத்தைப்புலி கடந்து சென்றது.
குன்னூர்
குன்னூர் அருகே டைகர் ஹில் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த குடியிருப்பு அருகே தேயிலை தோட்டங்கள் அதிக அளவில் உள்ளன. தேயிலை தோட்டங்களையொட்டி வனத்துறைக்கு சொந்தமான காப்பு காடு உள்ளது. வனப்பகுதியில் மான், காட்டெடுமை போன்ற வன விலங்குகள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன. ஒரு சில சமயங்களில் இந்த பகுதிகளில் சிறுத்தைப்புலி நடமாட்டமும் இருக்கும். அதன்படி வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளில் புகுந்துவிடுகின்றன. குன்னூர் டால்பின் ேநால் சாலையில் மூன்று ரோடு சந்திப்பில் சிறுத்தைப்புலி ஒன்று சர்வசாதாரணமாக சாலையை கடந்து சென்றது. இதனை அந்த வழியாக கார்களில் சென்றவர்கள் கவனித்தனர். மேலும் அந்த சிறுத்தைப்புலியை செல்போனில் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர். தற்போது சிறுத்தைப்புலி, மான்கள் அடிக்கடி குடியிருப்பு பகுதியில் உலா வருகின்றன. அதனால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்கள்.