சிறுத்தை உயிரிழந்த வழக்கு: ப.ரவீந்திரநாத் எம்.பி. தோட்ட மேலாளர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி


சிறுத்தை உயிரிழந்த வழக்கு:  ப.ரவீந்திரநாத் எம்.பி. தோட்ட மேலாளர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
x
தினத்தந்தி 3 Nov 2022 6:45 PM GMT (Updated: 3 Nov 2022 6:45 PM GMT)

பெரியகுளம் அருகே சிறுத்தை உயிரிழந்த வழக்கில் ப.ரவீந்திரநாத் எம்.பி. தோட்ட மேலாளர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

தேனி

பெரியகுளத்தை அடுத்த கைலாசப்பட்டி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் தேனி அ.தி.மு.க. எம்.பி. ப.ரவீந்திரநாத் உள்பட 3 பேருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்து வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ப.ரவீந்திரநாத் எம்.பி.யின் தோட்ட மேலாளர்களான பெரியகுளத்தை சேர்ந்த தங்கவேல், ராஜவேல், அந்த தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்த பூதிப்புரத்தை சேர்ந்த தொழிலாளி அலெக்ஸ்பாண்டியன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் எம்.பி.யின் தோட்ட மேலாளர்களான தங்கவேல், ராஜவேல் ஆகிய 2 பேருக்கும் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு முறையும், மாவட்ட செசன்சு கோர்ட்டில் 2 முறையும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், தங்கவேல், ராஜவேல் ஆகியோருக்கு ஜாமீன் கேட்டு மாவட்ட செசன்சு கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை மாவடட செசன்சு நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் நேற்று நடந்தது. வழக்கு விசாரணை நடந்து வருவதால் ஜாமீன் வழங்க அரசு தரப்பு வக்கீல் பாஸ்கரன் ஆட்சேபனை தெரிவித்தார். இதனால், இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story