சிறுத்தை மர்ம சாவு


சிறுத்தை மர்ம சாவு
x
தினத்தந்தி 11 Dec 2022 12:15 AM IST (Updated: 11 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உப்பட்டி தேயிலை தோட்டத்தில் சிறுத்தை மர்மமாக இறந்து கிடந்தது.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா உப்பட்டியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்திற்குள் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக தேவாலா வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனச்சரகர் சஞ்சீவி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அங்கு உடல் அழுகிய நிலையில் ஆண் சிறுத்தை மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

பின்னர் முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஸ்குமார் வரவழைக்கப்பட்டு சிறுத்தை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடற்கூறுகள் ஆய்வுக்காக சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது. அதன் அறிக்கை வந்த பின்னர் தான் சிறுத்தை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story