சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் பலி


சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் பலி
x

கடமலைக்குண்டு அருகே சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் பலியானது

தேனி

கடமலைக்குண்டு அருகே உள்ள குமணன்தொழு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி. இவர், வனத்தாய்புரத்தில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் 6 ஆடுகள், 4 பசுக்களை வளர்த்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் பசுவிடம் பால் கறப்பதற்காக அங்கு சென்றார். அப்போது 3 ஆடுகள் உடல் கிழிக்கப்பட்டு இறந்து கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடமலைக்குண்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து இறந்த ஆடுகளை பார்வையிட்டனர். பின்னர் கால்நடை டாக்டரும் அங்கு வரவழைக்கப்பட்டார். இதையடுத்து டாக்டர் மூலம் ஆடுகளின் உடல்கள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்:-

மேகமலை மலையடிவார பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை சிறுத்தை அடித்து கொன்றுள்ளது. இதனால் இந்த ஆடுகளும் சிறுத்தை தாக்கி இறந்திருக்கலாம் என்றனர். சிறுத்தை தாக்கி ஆடுகள் பலியான சம்பவத்தால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.கடமலைக்குண்டு அருகே சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் பலியானது


Next Story