சிறுத்தை நடமாட்டம்; வாகன ஓட்டிகள் அச்சம்
ஊட்டி-கூடலூர் சாலையில் சிறுத்தை நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.
ஊட்டி,
ஊட்டியை சுற்றி தொட்டபெட்டா, கவர்னர்சோலை, கேர்ன்ஹில், உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்கு கரடி, காட்டெருமை, சிறுத்தை, கடமான் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் குடியிருப்புகளுக்கு புகுந்து வருகின்றது. இந்தநிலையில் நேற்று ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை பைக்காரா பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடியது. தொடர்ந்து சிறுத்தை சாலையை கடக்க முயற்சி செய்தது. அப்போது வாகனங்கள் வந்து கொண்டு இருந்ததால், வாகனங்கள் செல்லும் வரை சாலையோரத்திலேயே நின்றது. மேலும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். சில வாகன ஓட்டிகள் சிறுத்தையை செல்போனில் வீடியோ எடுத்தனர். பின்னர் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையில் நிற்கும் போது வாகனங்களை விட்டு கீழே இறங்கக்கூடாது. வனவிலங்குகள் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றனர்.