"எங்கும், எதிலும் தமிழ் உயர பறக்கட்டும்..." முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்


எங்கும், எதிலும் தமிழ் உயர பறக்கட்டும்... முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்
x

'எங்கும், எதிலும் தமிழ் உயர பறக்கட்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 'இலக்கிய மலர் 2023' என்ற சிறப்பு மலரினை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பெற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரதிகளை சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் புகழ்பெற்ற ஓவியர் டிராட்ஸ்கி மருது ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இதுபற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய 'டுவிட்டர்' பதிவில் கூறி இருப்பதாவது,

இலக்கிய திருவிழா, சொற்பொழிவுகள், புதிய நூலகங்கள், புத்தக கண்காட்சிகள் என தமிழுக்கு மகுடம் செய்யும் நமது அரசில், மூத்த படைப்பாளிகள், ஆய்வாளர்களின் பங்களிப்புடன் இலக்கிய மலர்-2023 வெளியிடப்பட்டு உள்ளது.

செய்தி மக்கள் தொடர்புத் துறைக்கு பாராட்டுகள்! எங்கும், எதிலும் தமிழ் உயர பறக்கட்டும்!.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.


Next Story