ராகுல் காந்திக்கு இழைக்கப்பட்ட அநீதியை மக்களிடம் எடுத்து செல்வோம்
ராகுல் காந்தி பதவி பறிப்பு மூலம் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை மக்களிடம் எடுத்துச் செல்வோம் என விருதுநகரில் ெரயில் மறியலுக்கு சென்ற போது கைதான மாணிக்கம்தாகூர் எம்.பி. தெரிவித்தார்.
ராகுல் காந்தி பதவி பறிப்பு மூலம் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை மக்களிடம் எடுத்துச் செல்வோம் என விருதுநகரில் ெரயில் மறியலுக்கு சென்ற போது கைதான மாணிக்கம்தாகூர் எம்.பி. தெரிவித்தார்.
எம்.பி. கைது
விருதுநகரில் ெரயில் மறியலுக்கு சென்ற மாணிக்கம்தாகூர் எம்.பி. கைதாகிய நிலையில் நிருபர்ளுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
ராகுல் காந்தி பதவிபறிப்பு என்பது அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். கர்நாடக மாநிலம் கோலார் சட்டசபை தொகுதியில் பேசிய பேச்சின் அடிப்படையில் குஜராத்தில் தீர்ப்பு பெற்று அவர் வீட்டை காலி செய்யும் வரை பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ராகுல் காந்திக்கு இழைக்கப்பட்ட அநீதியை இனி மக்கள் மன்றத்திற்கு எடுத்து செல்வோம். கர்நாடக மாநில சட்டசபையின் போதும் இப்பிரச்சினையை மக்களிடம் எடுத்து செல்ல காங்கிரஸ் நடவடிக்கை மேற்கொள்ளும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க.வினர் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இதனை தி.மு.க.வினர் சட்டபூர்வமாக எதிர்கொள்வர்.
வரவேற்பு
அண்ணாமலை தனது வீட்டு வாடகை, உதவியாளர் ஊதியம், செல்போன்பில் என ஒவ்வொன்றும் ஒவ்வொருவரால் செலுத்தப்படுவதாக தெரிவித்துள்ள நிலையில் அவர் கட்டியுள்ள விலை உயர்ந்த கைக்கெடிகாரத்திற்கான பில்லை காட்டாமல் ஒரு வெள்ளைத்தாலில் ரசீதை காட்டி உள்ளார். தேவையில்லாமல் அவரே பிரச்சினையில் மாட்டியுள்ளதாகத்தான் தெரிகிறது.
மத்திய அரசு சி.ஆர்.பி.எப். தேர்வினை தமிழில் நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் மத்திய அரசு அதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக விருதுநகரில் காமராஜர் சிலையில் இருந்து ராகுல் காந்தி பதவி பறிப்பை கண்டித்து ெரயில் மறியலில் ஈடுபட மாணிக்கம் தாகூர் எம்.பி. காங்கிரஸ் கட்சியினருடன் ஊர்வலமாக சென்றார். இந்த ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
140 பேர் கைது
ெரயில் நிலையம் அருகே சென்றபோது போலீசார் வழிமறித்து ெரயில் மறியலில் ஈடுபட முயன்ற மாணிக்கம் தாகூர் எம்.பி. உள்பட 140 பேரை கைது செய்தனர். மாணிக்கம் தாகூர் எம்.பி. போலீசார் வழிமறித்த இடத்திலேயே அமர்ந்து போராட்டத்தினை மேற்கொண்டார்.
இதில் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் ஸ்ரீ ராஜாசொக்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ண சாமி, முன்னாள் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட நிர்வாகிகள் வக்கீல் சீனிவாசன், சிவகுருநாதன், வெயிலுமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.