வீடுதோறும் கொடியேற்றுவோம்... நானொரு பெருமைமிகு இந்தியன்: நடிகர் ரஜினிகாந்த்


வீடுதோறும் கொடியேற்றுவோம்...  நானொரு பெருமைமிகு இந்தியன்:  நடிகர் ரஜினிகாந்த்
x

ஒவ்வோர் இடத்திலும் நமது தேசிய கொடியை பறக்க செய்வோம் என நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.சென்னை,நாடு முழுவதும் ஓராண்டுக்கு, இந்தியா விடுதலை அடைந்ததன் 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை முன்னிட்டு வீடுதோறும் மூவர்ண கொடியை மக்கள் ஏற்றி வருகின்றனர். விளையாட்டு வீரர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோரும் தேசிய கொடியை தமது வீடுகளில் ஏற்றி வருகின்றனர்.

இதுபற்றி நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில், வீடுதோறும் கொடியேற்றுவோம். நானொரு பெருமைமிகு இந்தியன் என்று தலைப்பிட்டு பதிவொன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர விழா... நமது தாய்நாடு. அதற்கு மரியாதை அளிக்கும் அடையாளம் ஆக, நம்முடைய ஒற்றுமையின் வெளிப்பாடாக, சொல்லொண்ணா போராட்டங்கள் மற்றும் துயரங்கள், வலி மற்றும் ஏமாற்றம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு...

இந்த விடுதலைக்காக தங்களது வாழ்வை சுயநலமின்றி தியாகம் செய்த ஆயிரக்கணக்கான மக்களுக்காக... சுதந்திர போராட்ட வீரர்கள், வீரமரணம் அடைந்தவர்கள் மற்றும் தலைவர்களுக்காக... வீடுதோறும் மூவர்ண கொடியேற்றுவோம் என தெரிவித்து உள்ளார்.

சாதி, மதம் மற்றும் அரசியல் கடந்து நன்றியுடன் அவர்களை நாம் கவுரவித்து, வணங்குவோம். நமது இல்லங்கள், அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களின் வெளியே பெருமையுடன் தேசிய கொடியை பறக்க விட்டு, இந்திய தேசிய கொடி பற்றி நம்முடைய அடுத்த தலைமுறை குழந்தைகள் மற்றும் இளையோரும் தெரிய செய்வோம். சிறந்ததொரு இந்தியாவின் 75-வது ஆண்டை பெருமையுடன் கொண்டாடுவோம்.

ஒவ்வோர் இடத்திலும் நமது தேசிய கொடியை பறக்க செய்வோம். அதனை வணங்குவோம். ஜெய்ஹிந்த் என தெரிவித்து உள்ளார்.


Next Story