"சனாதனத்தை பற்றி தொடர்ந்து பேசுவோம்" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு


சனாதனத்தை பற்றி தொடர்ந்து பேசுவோம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 10 Sept 2023 1:54 PM IST (Updated: 10 Sept 2023 2:00 PM IST)
t-max-icont-min-icon

சனாதனத்தை பற்றி தொடர்ந்து பேசுவோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

நெய்வேலி,

நெய்வேலி எம்.எல்.ஏ ராஜேந்திரன் இல்ல திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

சனாதனத்தை பற்றி தொடர்ந்து பேசுவோம். சனாதன ஒழிப்பு மாநாட்டில் நான் கலந்துகொண்டு பேசியது ஒருநாள் செய்தி. அதை பொய்யாக திரித்து இந்திய அளவில் பேச வைத்துவிட்டார்கள். சனாதனத்தை பற்றி இப்போது பேசவில்லை. 200 ஆண்டுகளாக பேசி வருகிறோம், இனியும் தொடர்ந்து பேசுவோம்.

ஜி20 மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்த குடிசைகளை திரை போட்டு மூடியது தான் மத்திய அரசின் சாதனை. பாஜகவின் ஊழல்கள் வெளிப்பட்டு வருகிறது, அதை மறைக்கவே என் மீது அவதூறு பரப்பி வருகின்றனர். மணிப்பூரில் நடந்த இனப்படுகொலைகளை காணாது கண்மூடி இருந்தவர் பிரதமர் மோடி.

இந்தியாவை மாற்றுவதாக கூறிய பிரதமர் மோடி தற்போது இந்தியா பெயரை மாற்றியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் பாசிச ஆட்சியை தோற்கடிப்போம்; சாலை, காப்பீடு திட்டத்தில் மத்திய அரசு ஊழல் செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story