வருமுன் காப்போம் மருத்துவ முகாம்


வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
x

புதுப்பட்டினம் ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி, குழந்தைகள் வளர்ச்சி ஊட்டச்சத்து அலுவலர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் வரவேற்றார். முகாமில் சீர்காழி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முகாமில் புதுப்பட்டினம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர். முகாமில் ஊராட்சி உறுப்பினர் கனகவள்ளி குபேந்திரன் மற்றும் கிராம செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார்.


Next Story