உள்நாட்டு வணிகர்களை காப்பாற்றும் அரசியல் கட்சிகளை ஆதரிப்போம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் பேச்சு


உள்நாட்டு வணிகர்களை காப்பாற்றும் அரசியல் கட்சிகளை ஆதரிப்போம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் பேச்சு
x

உள்நாட்டு வணிகர்களை காப்பாற்றும் அரசியல் கட்சிகளை ஆதரிப்போம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்தார்.

திருச்சி

லால்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் சங்க மாநில தலைவர் வெள்ளையன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை 40 - வது மாநில மாநாடு மே மாதம் 5-ந் தேதி சென்னை அச்சரப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.

மாநாட்டில் அரசியல்வாதிகளையோ, அமைச்சர்களையோ அழைப்பது இல்லை. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைப்பதற்கு வாய்ப்பில்லை.

உள்நாட்டு வணிகர்களை காப்பாற்றும் சுதேசிய நோக்கத்துடன் செயல்படும் அரசியல் கட்சிகளை வணிகர் சங்கம் என்றும் ஆதரிக்கும். மத்திய, மாநில அரசுகள் அந்நிய ஆதிக்கத்திற்கு தான் துணை போகிறது வணிகத் தொழிலை நம்பியுள்ள அப்பாவி வணிகர்களுக்கு துணை நிற்க மாட்டார்கள்.

லால்குடியில் சாலை பணிக்காக காந்தி சிலை அகற்றப்பட்டது. ஆனால் பணிகள் நிறைவுபெற்றும் காந்தி சிலை அமைக்கப்படவில்லை. மீண்டும் அமைக்காவிட்டால் எனது தலைமையில் லால்குடியில் மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநிலப் பொருளாளர் ரத்தினம், மாநில ஊடகப் பிரிவு அமைப்பாளர் மெஸ்வர் காந்தி வெள்ளையன், மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் லால்குடி சிவசக்திராமநாதன் மற்றும் திருச்சி, மதுரை, தேனி, தஞ்சாவூர், புதுக்கோட் டை, வேலூர், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story