2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு தக்க பாடம் புகட்டுவோம்இந்து முன்னணி மாநில தலைவர் பேச்சு
2024-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்று திருச்சியில் நடந்த இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயண கூட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் பேசினார்.
2024-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்று திருச்சியில் நடந்த இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயண கூட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் பேசினார்.
பிரசார பயண கூட்டம்
இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயணம் கடந்த 28-ந் தேதி திருச்செந்தூரில் தொடங்கியது. பிரசார பயணம் ஜூலை மாதம் 31-ந் தேதி சென்னையில் முடிவடைகிறது. இந்த பிரசார பயணம் நேற்று திருச்சிக்கு வந்தது.
இதையொட்டி திருச்சி புத்தூர் நால்ரோடு அருகே பிரசார பயணம் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-
ஆன்மிக பூமி
ராம.கோபாலன் அவர்கள் தமிழகம் முழுவதும் பிரசார பயணம் மேற்கொண்டு, பல்வேறு போராட்டங்களை நடத்தி இந்துக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தினார். அவர் வழியில் நாமும் தொடர்ந்து பயணம் மேற்கொண்டு வருகிறோம். இந்து கோவில்கள் அரசிடம் இருப்பதால் கோவில் நிலங்கள், நகைகள் கொள்ளையடிக்கப்படுகிறது.
தற்போது, புதிதாக கோவில் நிலங்களை விற்க அனுமதிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளது கண்டிக்கத்தக்கது. அமைச்சர் சேகர்பாபு கோவில் நிலங்களை மீட்டு விட்டதாக கூறுகிறார். யாரிடம் இருந்து நிலங்களை மீட்டார் என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை.
ஆட்சி மாற்றம் வரும்
எங்களிடம் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களின் பட்டியல் உள்ளது. அதை தருகிறோம். அவரை மீட்டுக்கொடுக்க கூறுங்கள். இந்த பிரசார பயணம் இந்துக்களை ஒருங்கிணைக்கும். வருகிற காலம் இந்துக்களின் காலம். தி.மு.க. அரசு இந்துக்களின் மன நிலையை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
இல்லையென்றால் வருகிற 2024-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வுக்கு தக்க பாடம் புகட்டுவோம். அதற்கும் செவிசாய்க்கவில்லை என்றால் 2026 தேர்தலில் ஆட்சி மாற்றத்தை இந்து மக்கள் ஏற்படுத்துவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக இந்து அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர் சிவனேஸ்வரி கடவுள் வாழ்த்து பாடினார். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாநில இணை அமைப்பாளர்கள் பொன்னையா, ராஜேஷ், மாநில் பொதுச்செயலாளர் முருகானந்தம், கோட்ட செயலாளர் போஜராஜன், மாவட்ட செயலாளர் ஜீவரத்தினம் ஆகியோர் உள்பட பலர் சிறப்புரையாற்றினார். முடிவில் இந்து முன்னணி கோ-அபிஷேகபுரம் மண்டல பொதுச்செயலாளர் கணேஷ்குமார் நன்றி கூறினார்.